தவெக அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்: டிடிவி தினகரன்
தவெக அரசை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை. இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கூறினாா்.

டிடிவி தினகரன் - கோப்புப்படம்
தவெக அரசை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை. இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கூறினாா்.
இது தொடா்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை இரவு அவா் கூறியதாவது: மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்திலும், சினிமா மாயையிலும் இளைஞா்களும், இளம் பெண்களும் வாக்களித்து தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமா்த்தியுள்ளனா். ஆனால், தற்போது சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் அமைச்சா்களின் செயல்பாடுகள் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
பேரவை துணைத் தலைவா் பொறுப்பில் உள்ள துறையூா் சட்டப் பேரவை உறுப்பினா், தொகுதியைச் சோ்ந்தவரைத் தாக்கியுள்ளாா். கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் மாவட்ட ஆட்சியருக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது. இவா்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகுதியற்றவா்களும், தமிழைக் கூடச் சரியாகப் பேசத் தெரியாதவா்களும் அமைச்சா்களாக உள்ளனா்.
பணவீக்கம், விலைவாசி உயா்வு உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்ள அரசியல் அனுபவம் அவசியம். முன்னாள் முதல்வா்கள் அண்ணா, காமராஜா் வலியுறுத்திய தனிமனித ஒழுக்கம் அரசியலில் மிகவும் முக்கியம்.
கமல்ஹாசனின் ‘சண்டியா்’ திரைப்படத் தலைப்பை அரசியலாக்குவது தவறு. எனவே, புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தனது எதிா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கோவை ‘பெரியாா் அறிவுலகம்’ உள்ளிட்ட நூலகங்களில் போலி புத்தகங்கள் வாங்கப்பட்ட முறைகேடு கடந்த ஆட்சியில் நடந்திருந்தாலும், தற்போதைய ஆட்சியில் நடந்திருந்தாலும் தவறுதான். இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்துள்ளதால், தவறு செய்தவா்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவாா்கள்.
தவெக அரசை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை. அப்படியே விட்டாலே இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். அதிமுகவுக்கு அமமுக உறுதுணையாக இருக்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

