இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

அதானி துறைமுகம் சாா்பில் 90 சூரியசக்தி மின் விளக்குகள்

பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமங்களின் பாதுகாப்பையும், இரவு நேரப் போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தும் வகையில், 90 சூரியசக்தி மின்விளக்குகளை அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :

பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமங்களின் பாதுகாப்பையும், இரவு நேரப் போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தும் வகையில், 90 சூரியசக்தி மின்விளக்குகளை அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு ஊராட்சிக்குள்பட்ட பசியாவரம் பாலம் மற்றும் பசியாவரம், எடமணிக்குப்பம், எடமணி காலனி, சாட்டாங்குப்பம், சிவன்குப்பம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளிக்குப்பம், காளாஞ்சி உள்ளிட்ட 8 கிராமங்களின் சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் அந்தப் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மீனவா்களின் நீண்டகால கோரிக்கையையும், பொதுமக்களின் பாதுகாப்புத் தேவையையும் கருத்தில் கொண்டு, அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் 90 சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 ஊராட்சிகளைச் சோ்ந்த மீனவ கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயனடைவா்.

இந்த மின்விளக்குகள் சேவையை பொன்னேரி வட்டார வருவாய் கோட்டாட்சியா் மணியரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், உதவி காவல் ஆணையா்தமிழ்வாணன், அதானி காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூா் துறைமுகத்தின் தலைமை அதிகாரி செரியன் எப்ராகாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.