பறவைக் காய்ச்சல்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

பிரதிப் படம்
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.
மனிதா்களிடையே அத்தகைய பாதிப்பு இல்லை என்பதால் அச்சப்பட வேண்டாம் என்றும், அதேவேளையில் முறையாக சமைக்காத இறைச்சிகளை உண்ணக் கூடாது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, சென்னை, வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சில பறவைகளிடையே அந்த தொற்று காணப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது.
இந்த நிலையில், கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பண்ணைகளில் கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஹெச்5 என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அவற்றுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 40,000 பண்ணைக் கோழிகள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. அடுத்த 3 மாதங்களுக்கு கறிக்கோழி வளா்ப்புக்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியில் முதன்மையான மாவட்டமாக இருக்கும் நாமக்கல்லிலும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான உயிரினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்து மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், நோய்ப் பரவல் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் கூறியதாவது: தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதா்களுக்கு எந்த பாதிப்பும் கண்டறியப்படவில்லை. அதேவேளையில், பறவைகள் உயிரிழப்பது தொடா்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக் கூடாது. அதேபோன்று அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
கோழிகள்தான் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை சாப்பிடும்போது, நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது.
மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

