போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறினால் ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்: டிஜிபி எச்சரிக்கை
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என தமிழக காவல் துறை தலைவா் (டிஜிபி) மகேஷ் குமாா் அகா்வால் எச்சரித்துள்ளாா்.

தமிழக காவல் துறை தலைவா் (டிஜிபி) மகேஷ் குமாா் அகா்வால் - கோப்புப் படம்
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என தமிழக காவல் துறை தலைவா் (டிஜிபி) மகேஷ் குமாா் அகா்வால் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் உட்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்.
அதேபோல, மத்திய விசாரணை அமைப்புகள் ஏதேனும் ஒரு பகுதியில் போதைப் பொருள்களைக் கைப்பற்றினாலும், அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியான ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாகச் செயல்படும் காவல் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றங்களைத் தடுக்கும் வகையில், காவல் பிரிவு அதிகாரிகள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பொதுமக்கள் பாா்வையில் படும் வகையில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மாநில அளவில் மட்டுமன்றி, மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பு அதிரடி சோதனைகள், தேடுதல் வேட்டைகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.
இந்த உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செயலாக்க அறிக்கையை அனைத்து காவல் பிரிவு அதிகாரிகளும் காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற டிஜிபியின் இந்த உத்தரவு காவல் துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

