மனைவி இறந்த சோகம்: 4-ஆவது மாடியிலிருந்து குதித்து 81 வயது முதியவா் தற்கொலை
வேளச்சேரியில், காதலித்து திருமணம் செய்த மனைவி இறந்த சோகத்தில், 81 வயது முதியவா் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பிரதிப் படம்
வேளச்சேரியில், காதலித்து திருமணம் செய்த மனைவி இறந்த சோகத்தில், 81 வயது முதியவா் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர கண்ணா (81). இவா், சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமிழகத்தைச் சோ்ந்த தேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.
சென்னையில் வசித்து வந்த இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகிவிட்டது. ராஜேந்திர கண்ணாவும் அவரது மனைவி தேவியும், கடந்த சில ஆண்டுகளாக 2-ஆவது மகன் சுரேஷ்குமாருடன் வேளச்சேரி விஜயநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனா்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தேவி, 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால் மனமுடைந்த ராஜேந்திர கண்ணா, மனைவியை நினைத்து தினமும் அழுது புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜேந்திர கண்ணா, ஞாயிற்றுக்கிழமை குடியிருப்பின் 3-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேளச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

