இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம்!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு முருகன் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Complete ban on carrying mobile phones inside the Thiruchendur Murugan Temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். - (கோப்புப் படம்)

Updated On :

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு முருகன் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவ. 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூரில் சனிக்கிழமை காலை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சி கால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதேபோன்று, பழனி, சென்னையில் வடபழனி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ. 15) நடைபெறுகிறது.

இதையொட்டி, திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் குவிந்து வருகின்றனர்.

சென்னையில் வடபழனி திருப்போரூர், சிறுவாபுரி, பண்ருட்டி உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வடபழனியில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை வழங்கப்பட்டு நிலையில், முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Summary

On the occasion of the Kanda Sashti festival, large numbers of devotees are gathering at various prominent Murugan temples across Tamil Nadu to offer their prayers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.