திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

திருச்செந்தூரில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்!

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது குறித்து...

Soorasamharam held with great grandeur at Tiruchendur

முருகன் / முருகனின் வேலால் வீழ்த்தப்படும் சூரன்

Updated On :

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கஜ முகத்துடனும், சிங்க முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்த பிறகு சுயரூபத்தில் வந்த சூரனை முருகன் தனது வேலால் வதம் செய்தார். பிறகு சூரனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.

இந்நிகழ்வின்போது திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.

கந்த சஷ்டி விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள், சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரையில் குளித்து விரதத்தை நிறைவு செய்தனர்.

நாளை திருக்கல்யாணம்

கந்தசஷ்டி விழாவிம் 7-ம் நாளான நாளை (நவ. 16) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பகுளம் அருகே உள்ள முருகமடத்தை சென்று சேருகிறார்.

அங்கு மாலை 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் காட்சி கொடுத்ததும் தெற்கு ரத வீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, இரவு 11 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Summary

Soorasamharam held with great grandeur at Tiruchendur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.