மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் வன்னி அரசு
மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருப்பது குறித்து...
வன்னி அரசு - கோப்புப்படம்.
மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
மேக்கேதாட்டில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என அண்மையில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:
அவர்கள் அணை கட்டுவோம் என்று சொல்வது புதிதல்ல. முன்னாள் முதல்வர் எடியூரப்பா காலத்திலிருந்தே கர்நாடக அரசு அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அணை கட்டுவோம் என்றுதான் அவர்கள் சொல்வார்கள், அப்படித்தான் சொல்ல முடியும், சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.
இருப்பினும், அணையைக் கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை மற்றும் நிலைப்பாடு. இதைத்தான் கடந்த கால அரசும் வலியுறுத்தியது. தற்போதுள்ள முதல்வர் விஜய்யும் இதைத்தான் சொல்கிறார். மேக்கேதாட்டில் அணை கட்டுவது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடகத்துக்குக் கீழே உல்ள மாநிலங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாகின்ற சூழலில் பெரிய பாதிப்பை உருவாக்கும். ஆகவே, அந்த அணையைக் கட்டுவதென்பது மிக மோசமான செயல்.
எனவே, தமிழ்நாடு அரசு அதன் நிலைப்பாட்டை எப்போதும் மாற்றிக்கொள்ளாது. கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் அணையைக் கட்ட முடியாது, அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
Summary
Minister for Social Justice Vanni Arasu stated that the Tamil Nadu government will not permit the construction of a dam at Mekedatu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


