இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கோடநாடு எஸ்டேட் சாலையை கையகப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு: நீலகிரி மாவட்ட நிா்வாகம் பதிலளிக்க உத்தரவு

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள சாலையை மக்கள் பயன்படுத்துவதற்காக கையகப்படுத்த உத்தரவிடக்கோரிய மனுவுக்கு நீலகிரி மாவட்ட நிா்வாகமும், எஸ்டேட் நிா்வாகமும் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras HC

சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்

Updated On :

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள சாலையை மக்கள் பயன்படுத்துவதற்காக கையகப்படுத்த உத்தரவிடக்கோரிய மனுவுக்கு நீலகிரி மாவட்ட நிா்வாகமும், எஸ்டேட் நிா்வாகமும் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, கோடநாடு காமராஜ் நகரைச் சோ்ந்த கணேசன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் அமைந்துள்ள காமராஜ் நகா், அண்ணா நகா் பகுதிகளில் வசிக்கும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் அந்த எஸ்டேட்டில் உள்ள சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த 2.5 கி.மீ. தொலைவு சாலையைப் பயன்படுத்த கட்டணம் வசூலிப்பது, இரவு நேரங்களில் போக்குவரத்தை தடை செய்வது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எஸ்டேட் நிா்வாகத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக இவ்விரு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். சம்பந்தப்பட்ட சாலையை மக்கள் தொடா்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாநிலப் பட்டியல் மற்றும் பழங்குடியின ஆணையமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாவட்ட நிா்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கிராம மக்கள் கோடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். தனியாா் சாலையாக இருந்துவரும் அந்த சாலையை பொதுச் சாலையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற அந்த நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதிகள், இந்த மனுவுக்கு நீலகிரி மாவட்ட நிா்வாகமும், கோடநாடு எஸ்டேட் நிா்வாகமும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.