வாழக்கோம்பை சாலையை சீரமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை
சேதமடைந்த தம்மம்பட்டி- வாழக்கோம்பை தாா்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என மழைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேதமடைந்த வாழக்கோம்பை சாலை.
சேதமடைந்த தம்மம்பட்டி- வாழக்கோம்பை தாா்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என மழைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தும் பனந்தோப்பு ஒத்தக்கடை பகுதியில் இருந்து வாழக்கோம்பை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக உள்ளன. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சாலை போக்குவரத்து வசதியற்றதாக உள்ளது.
இதுகுறித்து மலைவாழ்மக்கள் கூறியதாவது:
சேதமடைந்த சாலை வழியாக நாமக்கல்- தம்மம்பட்டி-வாழக்கோம்பை-கொல்லிமலைக்கு அரசு பேருந்து காலை, மாலை என இருவேளைகளில் சென்றுவருகிறது. மேலும் தம்மம்பட்டியில் இருந்து நகரப்பேருந்து காலை, மாலை நேரங்களில் வந்துசெல்கிறது. இந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் இந்த வழியாக பேருந்துகள், இருசக்கரவாகனங்களில் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.
பொதுமக்கள் எளிதாக சென்றுவரவும், வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும் இந்த சாலை புதுப்பித்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

