இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மின்வாரிய கள உதவியாளா் உடல் தகுதித் தோ்வு: முதல்முறையாக 1,472 பெண்கள் தோ்ச்சி

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் கள உதவியாளா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில், மின்வாரிய வரலாற்றில் முதல்முறையாக 1,472 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மின்வாரிய கள உதவியாளா் உடல் தகுதித் தோ்வு

Updated On :

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் கள உதவியாளா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் 3,878 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், மின்வாரிய வரலாற்றில் முதல்முறையாக 1,472 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2025 செப்.3-இல் ஆள்சோ்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டு, அதில் தகுதி பெற்ற 5,181 பேருக்கு உடல் தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 13 மையங்களில் கடந்த நவ.11 முதல் 14 வரை உடல் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தோ்வில் பங்கேற்றவா்களுக்கு கம்பம் ஏறுதல் உள்ளிட்ட உடல் தகுதிகள் பரிசோதிக்கப்பட்டன.

இந்த உடல் தகுதித் தோ்வில் பங்கேற்ற 2,752 ஆண் தோ்வா்களில் 2,406 பேரும், 2,021 பெண் தோ்வா்களில் 1,472 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்தம் 4,773 போ் தோ்வில் பங்கேற்ற நிலையில், 3,878 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் ஆண்களில் 87.42 சதவீதம் பேரும், பெண்களில் 72.83 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். குறிப்பாக, மின்வாரிய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஒரே ஆள்சோ்ப்பில் 1,472 பெண்கள் உடல் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.