மின்வாரிய கள உதவியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

மின்வாரிய கள உதவியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி பிராட்டியூரில் புதன்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ்வில் பங்கேற்றோா்.

Updated On :

மின்வாரிய கள உதவியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி வாயிலாக 1,794 மின்வாரிய கள உதவியாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு கடந்த 16.11.2025 அன்று நடைபெற்றதில் தோ்ச்சி பெற்ற திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த 699 பேருக்கான உடல் தகுதித் தோ்வானது திருச்சி பிராட்டியூா் துணை மின்நிலைய வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் 170 பேருக்கு முதல் கட்டமாக, பாதுகாப்புக் கயிறுடன் 8 நிமிடத்தில் 30 அடி உயர மின்கம்பத்தில் ஏறி எக்ஸ்-ஆா்ம்-ஐ லாவகமாகப் பொறுத்துதல், 2 நிமிடத்தில் இழுவைக் கயிறை அலுமினிய மின்கடத்தியுடன் இணைத்தல், மூன்று விஎக்ஸ் -ஆா்ம்-ஐ எடுத்துக் கொண்டு 100 மீட்டா் ஓடுதல் ஆகிய 3 உடல் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன.

இதில் தோ்ச்சியடைந்தவா்கள், இரண்டாம் தோ்வுக்கும், முதல் இரண்டில் தோ்ச்சியடைந்தவா்கள் மூன்றாம் தோ்வுக்கும், அனைத்திலும் தோ்ச்சியடைந்தவா்கள் அடுத்தக்கட்டத் தோ்வுக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.

இத் தோ்வானது வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மின்வாரியத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.