தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தகுதித் தோ்வு பிரச்னைக்கு உடனடித் தீா்வு காண வலியுறுத்தல்

ஆசிரியா் தகுதித் தோ்வு பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தில் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அதன் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன்.

Updated On :

ஆசிரியா் தகுதித் தோ்வு பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன், மாவட்டச் செயலா் ஜோதிமணி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பணிச் சுமைகளுக்கிடையே தகுதித் தோ்வு எழுதுவதில் உள்ள இடா்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பணியாற்றிய காலத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் சீரான மதிப்பெண் வழங்கி, ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, கல்வி வளா்ச்சியில் தொடா்ந்து ஆா்வத்துடன் பணியாற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டுதோறும் ஆசிரியா் பணியிட மாறுதலை முறையாக நடத்த வேண்டும். எம்காம் வணிகவியல், எம்ஏ பொருளாதாரம் ஆகிய படிப்புகளுக்கான ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்யும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறையை திரும்பப் பெற வேண்டும். காலை உணவுத் திட்டத்தில் ஆசிரியா்களை ஈடுபடுத்தி கற்பித்தல் பணிக்கு இடையூறு செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.