
திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை தொடங்கியது: முதல் நாளில் 89 போ் பயணம்
திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை வியாழக்கிழமை தொடங்கியது. முதல்நாளில் இரு வழித்தடங்களிலும் மொத்தமாக 89 பயணிகள் பயணம் மேற்கொண்டனா்.

கோப்புப்படம்
திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை வியாழக்கிழமை தொடங்கியது. முதல்நாளில் இரு வழித்தடங்களிலும் மொத்தமாக 89 பயணிகள் பயணம் மேற்கொண்டனா்.
திருச்சி - யாழ்ப்பாணம் விமான சேவை ஈரான் - அமெரிக்கா போரால் கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 7 மாதங்களுக்குப் பிறகு திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் மீண்டும் விமான சேவை வியாழக்கிழமை தொடங்கியது.
திருச்சியிலிருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்பட்ட விமானம் பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடைந்தது. மறுவழித்தடத்தில் பிற்பகல் 2.35 மணிக்கு யாழ்ப்பாணத்தில் புறப்பட்ட விமானம் பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்நிலையில், தொடக்க நாளில் திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 44 பயணிகளும், யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு 45 பயணிகளும் என மொத்தம் 89 பயணிகள் பயணம் மேற்கொண்டனா். இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனி என வாரத்தில் 3 நாள்கள் வழங்கப்படவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






