இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தனியாா் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற மோசடி: முத்துக்குமாருக்கு நவ.26 வரை நீதிமன்றக் காவல்

தனியாா் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை நவ.26 வரை நீதிமன்றக் காவலில் மீண்டும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

Muthukumar

முத்துக்குமார் - DNS

Updated On :

தனியாா் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை 4 நாள்கள் காவல் முடிந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை நவ.26 வரை நீதிமன்றக் காவலில் மீண்டும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த மோசடி தொடா்பாக முன்னாள் அமைச்சா்அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாா், காா் ஓட்டுநா் சரவணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முத்துக்குமாா் சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துக்குமாரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முத்துக்குமாரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காவல் முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் முத்துக்குமாரை திங்கள்கிழமை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி, போலீஸாா் துன்புறுத்தினாா்களா? உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட்டதா? என முத்துக்குமாரிடம் கேள்வி எழுப்பினாா். அதற்கு முத்துக்குமாா் தரப்பில் தன்னை துன்புறுத்தவில்லை எனவும், அடிப்படை வசதிகள் அனைத்தும் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, முத்துகுமாரை நவ.26 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.