திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கமசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

தில்லியில் சர்வதேச வர்த்தக பொருள்காட்சி, தமிழ்நாடு நாள் விழாவை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு நாள் விழாவில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறித்து...

Inaugurating the Tamil Nadu Day celebrations

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 45-ஆவது இந்திய சா்வதேச வர்த்தகப் பொருட்காட்சி 2026-இல் தமிழ்நாடு நாள் விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் - டிஎன்எஸ்

Updated On :

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 45-ஆவது இந்திய சா்வதேச வர்த்தகப் பொருட்காட்சி 2026-இல் தமிழ்நாடு நாள் விழாவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் நடைபெறும் 45 ஆவது இந்திய சா்வதேச வர்த்தகப் பொருட்காட்சி 2026-இல், பாரத் மண்டபத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் "தமிழ்நாடு நாள் விழா"வை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி கே. வெங்கட நாராயணா ஆகியோர் இன்று (நவ.15) குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், இந்த ஆண்டு வாண்டு இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இந்திய சா்வதேச வர்த்தகப் பொருள்காட்சி நடைபெறும்.

நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கண்காட்சியாளர்களையும் பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சிகளில் இது ஒன்றாகும்.

இந்த உலகத்தரம் வாய்ந்த கண்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நாட்டில் தயாரிக்கப்படும் முக்கியப் பொருட்களை சந்தைப்படுத்தியும் வருகின்றன.

நடப்பாண்டில், இந்த பொருள்காட்சிக்கான கருப்பொருள் " வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" ஆகும். "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்பது நவீன கால தொழில் நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கலாசார மற்றும் பண்பாட்டை குறிக்கிறது

இந்த கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்), தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிமிடெட் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்) ஆகிய துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு அரசின் மகத்தானத் திட்டங்கள் குறித்தும் அரசின் சாதனைகளை குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் வேளாண்மைத் துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக இந்த அரங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி கே. வெங்கட நாராயணா தனது உரையில் தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் காக்கும் மகத்தான திட்டங்களை பற்றியும் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தினையும் மிக சிறப்பாக வியந்து பாராட்டினார்.

இந்த கண்காட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,

“இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருள்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து 1978 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பங்குப் பெற்று வருகிறது, தமிழின் வரலாறும், தமிழர்களின் வரலாறும் உலகம் அறிந்திடாத ஆதி காலத்திலிருந்து பல கோடி ஆண்டுகள் சிறப்பு கொண்டது. இந்த ஆண்டு 45 ஆவது பொருள்காட்சியில் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடைக்கோடியிலிருந்து தலையாட்டி பொம்மை போன்ற பண்பாட்டு பொருள்களும், காஞ்சிபுரம் பட்டு, தமிழர்களின் பழமை வாய்ந்த மாப்பிளை சம்பா அரிசி போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த பொருட்காட்சியை அனைவரும் குடும்பத்தோடு வந்து கண்டுகளிக்குமாறு தெரிவித்தார்.

மேலும், இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும், தங்களது மாநில நாள் விழாவினை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு நாள் விழா இன்று (நவ.15) பாரத் மண்டபத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழின் இனிமையையும், தமிழர்களின் உயரிய பண்பாட்டையும், தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கும் வண்ணம் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாநிலத்தின் கலாசாரப் பாரம்பரியம் பெருமையுடன் பறைசாற்றப்பட்டது.

தமிழ்நாடு நாள் விழாவினை தில்லியில் வசிக்கும் தமிழர்கள் உட்பட, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் புதுதில்லி, கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமை உள்ளுறை ஆணையர் ஆர். ஜெயா, புதுதில்லி, உள்ளுறை ஆணையர் முனைவர் ஆஷிஷ் குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Inaugurating the Tamil Nadu Day celebrations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.