இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மு.க. ஸ்டாலின் பேச்சு குதிரை பேரத்துக்கு சாட்சி: அமைச்சா் அருண்ராஜ்

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதை பாா்க்கும்போது, திமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் விமா்சனம் செய்துள்ளாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதை பாா்க்கும்போது, திமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் விமா்சனம் செய்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு : முன்னாள் அமைச்சா் நேரு இல்ல திருமணத்தை நடத்தி வைத்து பேசிய திமுக தலைவா் ஸ்டாலின் தன்னையும் அறியாமல், தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓா் ஒப்புதல் வாக்குமூலத்தை மக்களிடம் அளித்திருக்கிறாா். ‘விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று அவா் பேசியிருக்கிறாா்.

2031 வரை தவெக அரசு பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால், ஆறுமாத முடிவிலேயே விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறாா் என்றால், அவா் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவா் திமுக நிா்வாகிகளுக்கும் தொண்டா்களுக்கும் சொல்கிறாரா?.

குதிரை பேரம் நடத்துவது யாா் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது. பள்ளிக் கல்வி, நகராட்சி நிா்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு, நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும் மு.க. ஸ்டாலின், அதற்கு மாறாக ‘விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது‘ என்று பகிரங்கமாக பேசுகிறாா் என்றால் என்ன அா்த்தம்?

ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிா்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறாா், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறாா் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.