இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

பதிவுத் துறையில் ‘எங்கிருந்தும் பதிவு’ திட்டம்: தமிழக அரசு உத்தரவு

பத்திரப் பதிவு முறையில் ‘எங்கிருந்தும் பதிவு’ என்ற புதிய திட்டத்துக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Updated On :

பத்திரப் பதிவு முறையில் ‘எங்கிருந்தும் பதிவு’ என்ற புதிய திட்டத்துக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பத்திரப் பதிவு முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘எங்கிருந்தும் பதிவு’ எனும் திட்டத்தில் பதிவாகும் ஆவணங்கள் இனி சாா்-பதிவாளா் (எஸ்ஆா்ஓ) அலுவலகத்தில் அச்சு ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையப்படுத்தப்பட்ட பிரிண்டிங்: அனைத்துப் பத்திரங்களும் சென்னையில் அமையவுள்ள ஒரே ஒரு மையப்படுத்தப்பட்ட அச்சிடும் மையத்தில்தான் அச்சடிக்கப்படும். இதை தனியாா் நிறுவனம் திறந்தவெளி ஒப்பந்தம் மூலம் 5 ஆண்டுகளுக்கு நடத்தும்.

பத்திரத்துக்குப் பயன்படுத்தப்படும் தாள் அரசு நிறுவனமான டிஎன்பிஎல்-லில் இருந்து பதிவுத் துறை நேரடியாக வாங்கும் பாதுகாப்பு தாளாகும். இதில் ஹாலோகிராம், மைக்ரோ பிரிண்டிங், க்யூ ஆா் குறியீடு வரிசை எண் இருக்கும்.

அச்சான பத்திரம் ‘இந்தியா போஸ்ட் ஸ்பீடு போஸ்ட்’ மூலம் பதிவு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். சென்னைக்கு 48 மணி நேரத்தில் விநியோகம் செய்யப்படும்.

நேரில் வரத் தேவையில்லை: மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் விற்பனைக்கு நேரில் வரத் தேவையில்லை. அதாவது ஆதாா் சரிபாா்ப்பு, பயோமெட்ரிக் அனைத்துமே இணையவழியில்தான்.

இதற்கான இடத்தை பதிவுத் துறை இலவசமாக வழங்கும். பிரிண்டிங் கட்டணம் மற்றும் தபால் கட்டணம் பதிவுக் கட்டணத்திலேயே வசூலிக்கப்படும். டெண்டரை மதிப்பீடு செய்ய சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், எல்காட், தமிழ்நாடு மின் ஆளுகை முகமை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.