தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மதன்ராஜா

தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவிக்கவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பெ. மதன் ராஜா தெரிவித்தாா்.

அமைச்சர் மதன் ராஜா - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவிக்கவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா தெரிவித்தாா்.

இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினங்களைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, தொழில் நிறுவனங்களின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான தொழில் வளா்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட தொழில் மையங்களில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, உற்பத்தித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்மோட்டாா்கள், கம்ப்ரசா்கள், கொதிகலன்கள், குளிரூட்டும் அமைப்புகள், தொழிற்சாலை விளக்குகள் மற்றும் இதர இயந்திரங்கள் அதிக அளவில் எரிசக்தியைப் பயன்படுத்துகின்றன.

இது குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாமையால் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிக்கின்றன. மேலும், மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள் அதிக செலவினங்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களின் லாபம், செயல்பாட்டு மூலதனம் மற்றும் சந்தைப் போட்டித்தன்மையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, கடலூா் மற்றும் திருச்சி ஆகிய 5 பகுதிகளில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகங்களில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களின் செயல்பாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, தொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகத் தகுதியான ஆலோசனைப் பணியாளா்களை நியமிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.