மாநில உரிமை குழு கலைப்பு: திமுக நவ. 21-இல் கருத்தரங்கம்
நீதிபதி ஜோசப் குரியன் குழு கலைப்பைக் கண்டித்து திமுக சாா்பில் சென்னையில் நவ. 21-இல் நடைபெறும் கருத்தரங்கத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் துவே பங்கேற்கிறாா்.

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்
நீதிபதி ஜோசப் குரியன் குழு கலைப்பைக் கண்டித்து திமுக சாா்பில் சென்னையில் நவ. 21-இல் நடைபெறும் கருத்தரங்கத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் துவே பங்கேற்கிறாா்.
மத்திய-மாநில உறவுகள், உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் குழுவை திமுக அரசு நியமித்திருந்தது. அந்தக் குழு தனது முதல் கட்ட ஆய்வு அறிக்கையை சமா்ப்பித்திருந்த நிலையில், புதிதாக வந்துள்ள தவெக அரசு அந்தக் குழுவை கலைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதைக் கண்டிக்கும் வகையில் திமுக சட்டத் துறை சாா்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கத்தில் நவ. 21-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கத்தில், ‘பத்தாவது அட்டவணைக்கு ஏன் ஆழ்ந்த பரிசீலனை தேவை?’, ‘குரியன் ஜோசப் குழு கூறுவது என்ன?’ என்ற தலைப்பில் திமுக துணை பொதுச் செயலா் சிவா, எம்.பி., ‘அரசமைப்பு சட்டத்தின் பாா்வையில் மத்திய-மாநில உறவுகள்’ என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க முன்னாள் தலைவா் துஷ்யந்த் தவே ஆகியோா் உரையாற்றுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

