காவிரி விவகாரம்: தமிழக அரசின் 2 இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் 2 இடைக்கால மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து...
காவிரி நீர் விவகாரம் - கோப்புப் படம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த 2 இடைக்கால மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கான தண்ணீரைத் திறக்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தமிழகத்துக்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டர் நிலம் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடக அரசு இப்படி வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எப்படி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்துக்கு தர வேண்டிய பற்றாக்குறை நீர் 11 டிஎம்சியை திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு மனுக்கள் தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக மூன்றாவது மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை இன்று (நவ. 20) உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்குமார், அபரேஷ்குமார் சிங் ஆகியோர் அமர்வு விசாரித்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள் என கேள்வி எழுப்பினர்.
மேலும், 11 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடக் கோரிய மனு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரிய மனு ஆகிய இரு இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Summary
Cauvery issue: Supreme Court dismisses 2 interim petitions filed by the Tamil Nadu government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


