ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

மகாதீபம் நாளில் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களில் கனமழை!

கனமழை எச்சரிக்கை பற்றி...

Heavy rain

18 மாவட்டங்களில் கனமழை

Updated On :

மகா தீபத் திருநாளன்று திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆக்வான் புயல் நவ. 20-ல் மாலை ஒடிசா அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால், தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை வெளியிட்ட அறிக்கையில்,

நேற்று (19-11-2026) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அக்வான்” தீவிர புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (20-11-2026) 02.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வுலுவிழந்தது.

இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 07.30 மணி முதல் 08:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஓடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோர பகுதிகளில், கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது.

இது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 03 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதற்கடுத்த 06 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுவிழக்கக்கூடும்.

நவ. 20, 21ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவ. 22ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 23ல் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நவ. 24ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் தந்த மூன்று புயல்கள்

வங்கக் கடலில் உருவாகிய அர்னாப், முரசு ஆகிய இரண்டு புயல்களும் ஆந்திர மாநிலத்தை நோக்கிய கரையைக் கடந்தது. இதனால், அங்கு பெரும் பாதிப்பை சந்தித்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு பெரியளவில் மழை பெய்யவில்லை. மிதமான மழையோடு நிறுத்திக்கொண்டது.

மூன்றாவது புயலாக வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆக்வான் புயலாவது தமிழ்நாட்டிற்கு நல்ல மழை தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் பொய்யானது. ஆக்வான் அதன் திசையை மாற்றிக்கொண்டு ஆந்திரப் பக்கம் நகர்ந்தது, அதன்பின்பு ஒசாவில் நகர்ந்துள்ளது. இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது. இந்தப் புயலாலும் தமிழ்நாட்டுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாட்டுக்கு பெய்யவேண்டிய மழை எப்போது தான் பெய்யும்?

அடுத்த வரும் புயலாவது தமிழ்நாட்டுக்கு சாதகமாக அமையுமா என்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.