குவாரி விதிமீறல்! அரசுக்கு ரூ. 5.39 கோடி இழப்பு? திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி திடீர் சோதனை ஏன்?
திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடுகளில் 3 மணிநேரத்துக்கும் அதிகமாக சோதனை நடத்தப்பட்டது குறித்து...
பி. மூர்த்தி - கோப்புப் படம்
குவாரி விதிமீறல் புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் 3 மணிநேரத்துக்கும் அதிகமாக சோதனை நடத்தப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக மதுரை வாடிப்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி ஆகிய பகுதிகளில் கல், செம்மண் குவாரிகள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், மதுரை அருகே உள்ள செம்மண், கல் குவாரிகளில் விதிகளை மீறி செம்மண், கற்களை வெட்டி எடுத்ததாக பி. மூர்த்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் கோட்டாட்சியர்கள் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுரை சுற்றுவட்டாரங்களில் சில குவாரிகள் அனுமதியின்றி பினாமி பெயர்களில் இயங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான குவாரிகளில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கல், செம்மண் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு ரூ. 5.39 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், டெண்டர் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பாக மதுரையில் மூர்த்தியின் 2 வீடுகளிலும், சிவகங்கை பூவந்தியில் உள்ள அவரது உறவினர் ராஜாமணியின் வீட்டிலும் 3 மணி நேரமாக சோதனை நடத்தப்பட்டது.
Summary
Raids conducted at the residences of former DMK minister Moorthy in connection with a complaint regarding quarrying violations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


