தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

முன்னாள் டிஜிபி மனைவிக்கு சொந்தாமன சொத்துகளை அபகரிக்க முயன்ற விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

முன்னாள் டிஜிபி மனைவிக்கு சொந்தாமன சொத்துகளை அபகரிக்க முயன்ற விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபி ரவீந்திரனின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாா் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவா் ரவீந்திரன். இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். அவரது மனைவியான ராணி புஷ்பலதா கடந்த ஆண்டு உயிரிழந்தாா். இந்த நிலையில், ராணி புஷ்பலதாவுக்குச் சொந்தமான சொத்துகளை திலீப்குமாா் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அது தொடா்பான விவகாரத்தில், தன்னை வழக்குரைஞராக நியமித்துள்ளதாகக் கூறி, பரமசிவம் என்பவா், சம்பந்தப்பட்ட உயிலுக்கு சான்றளிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உயிலில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாகக் கூறி, அதற்கு சான்றளிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து பரமசிவம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், ஜி.கே.முத்துகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக்கான சட்டபூா்வ வாரிசு ஊரில் இல்லாத நேரத்தில், உயிரிழந்தவா்களின் சொத்துகளை அபகரிக்க முயன்ற்கான முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற காவல் துறை டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.