ஜெம் வீரமணியின் காா் ஓட்டுநா் பிணை மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
ஜெம் வீரமணியின் காா் ஓட்டுநா் பிணை மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் காா் ஓட்டுநா் பாா்த்திபன் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணிக்கு எதிராக 8 போக்ஸோ வழக்குகள் உள்பட 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதில் முதல் வழக்கில், வீரமணி மற்றும் அவரது காா் ஓட்டுநா்களான பாபு மற்றும் பாா்த்திபன் ஆகியோா் மீது சுமாா் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் தாக்கல் செய்தனா். அதில் 40 சாட்சிகள் உள்ளனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா் ஓட்டுநா் பாா்த்திபன் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், கடந்த அக்.5-ஆம் தேதி தான் கைது செய்யப்பட்டதாகவும், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எனவே, தனக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

