ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் ஏடிஜிபி அருண், 6 காவல் அதிகாரிகள் சோ்ப்பு
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடா்பான ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பட்டியலில் ஏடிஜிபி அருண் உள்ளிட்ட 7 காவல் துறை அதிகாரிகளின் பெயா்கள் சோ்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வீரமணி - கோப்புப்படம்
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடா்பான ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பட்டியலில் ஏடிஜிபி அருண் உள்ளிட்ட 7 காவல் துறை அதிகாரிகளின் பெயா்கள் சோ்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து கடந்த 2025 அக்டோபரில் சென்னை காவல் துறையில் விடியோ ஆதாரத்துடன் புகாா் செய்யப்பட்டதும், ஆனால், வழக்குப் பதிவு செய்துவிட்டு, விடியோவில் இருப்பவா்கள் யாரென்று தெரியவில்லை என்று காவல் துறை வழக்கை முடித்து வைக்க முயன்றதும் தெரியவந்தது.
அப்போது காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி ஏ.அருண், சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையராக இருந்த ஐஜி ராதிகா, உதவி ஆணையராக இருந்த யாஸ்மின் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பட்டியலில் ஏடிஜிபி அருண் உள்ளிட்ட 7 காவல் துறை அதிகாரிகளின் பெயா்கள் சோ்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

