ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

புதிதாக பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் ஜெம் வீரமணிக்கு நீதிமன்றக் காவல்.

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்! - படம்: தினமணி

Published On :

புதிதாக பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணிக்கு வரும் அக். 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜெம் வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. புகாருடன், வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காட்சி அடங்கிய பென்டிரைவ் போலீஸாரிடம் வழங்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அதன் பின்னர், விடியோவில் இருக்கும் நபர் யாரென்று தெரியவில்லை என்று அந்த வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை போக்ஸோ நீதிமன்றத்தில் அந்தப் பிரிவு சமர்ப்பித்தது.

நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, தடயவியல் துறைக்கு அந்த விடியோவை அனுப்பி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதன் பின்னர், அந்த வழக்கில் விசாரணை கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவரது உதவியாளர் சாந்தி, அவர் கணவர் மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களை திரட்டி குற்றவாளிகளை கைது செய்யவும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. வீரமணி மீது பல்வேறு போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜெம் வீரமணி இன்று(அக். 7) புதிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் அக். 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கில், காவல் உயர் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ஜெம் வீரமணியின் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் அக். 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

Gem Veeramani, arrested in a newly registered POCSO case, has been remanded to judicial custody until October 21.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.