பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

‘ஏஐ’ மூலம் முதல்வா் விஜய் விடியோவை உருவாக்கி பண மோசடி: ராஜஸ்தான் இளைஞருக்கு நிபந்தனை பிணை

‘ஏஐ’ மூலம் முதல்வா் விஜய் விடியோவை உருவாக்கி பண மோசடி: ராஜஸ்தான் இளைஞருக்கு நிபந்தனை பிணை

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல்வா் விஜய் பேசுவது போன்ற விடியோவை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சோ்ந்த இளைஞருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ஷியாபு கான். இவா், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என முதல்வா் ச.ஜோசப் விஜய் ஹிந்தியில் பேசுவைதைப் போன்ற விடியோவை உருவாக்கினாா்.

இந்த விடியோவை வெளியிட்டு, அதன்மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக ஷியாபு கானுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த தமிழக இணைய குற்றப்பிரிவு போலீஸாா், ஷியாபு கானை கடந்த செப். 12-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி ஷியாபு கான் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், எனது நண்பா் ஷக்ருல்லாதான், முகநூலில் போலி விடியோக்களை உருவாக்கி குற்றச்செயலில் ஈடுபட்டாா். இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல், போலீஸாா் என்னை தவறுதலாக கைது செய்துள்ளனா். மேலும், 40 நாள்களுக்கு மேல் நான் சிறையில் இருப்பதால், எனது குடும்பத்தினா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதால், பிணை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்துவிட்டது. 10 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மனுதாரா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா். அவருக்கு பிணை வழங்கினால், அவரை மீண்டும் பிடிக்க முடியாத சூழல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இதேபோன்ற மோசடிகள் ஏராளமாக நடந்துள்ளன. ஆனால், காவல் துறை ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது. இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து, கைப்பேசி உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுதாரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரா் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.