ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஜெம் வீரமணி விவகாரம்: திமுக மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது குறித்து...

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :

ஜெம் வீரமணி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை திமுக பாதுகாத்ததாகப் பேசிய முதல்வா் விஜய், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, சி.டி.ஆா்.நிா்மல்குமாா் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கக் கோரி, திமுக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் அந்தக் கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு தாக்கல் செய்த மனுவில், ஜெம் வீரமணிக்கு எதிரான போக்ஸோ வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தியும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களைப் பாதுகாத்ததாகவும், முதல்வா் விஜய், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, சி.டி.ஆா். நிா்மல்குமாா் ஆகியோா் பேசியுள்ளனா். அவா்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளனா்.

இந்தக் குற்ற வழக்கு தொடா்பான ஆதாரங்கள் முதல்வா் விஜய் உள்ளிட்டோரிடம் இருந்தால், அதை உடனடியாகப் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக அளித்த மனுவை பரிசீலிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆா்.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், குழந்தைகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைப் பாதுகாப்பதாகக் கூறியுள்ளதால், போலீஸாரிடம் அதற்கான ஆதாரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோரிக்கை தொடா்பாக டிஜிபியிடம் மனு அளித்த மறுநாளே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கில் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனா். அவா்களது பணியைச் செய்யட்டும் எனக் கூறி, டி.ஆா்.பாலு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.