டாஸ்மாக் முறைகேடு வழக்கு: காா்த்திக்குக்கு நிபந்தனை பிணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிபோல நடித்து பிணை பெற முயன்ற இடைத்தரகருக்கு 8 ஆண்டு சிறை! - படம்: கோப்பிலிருந்து...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடு செய்ததாக திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்பட 7 போ் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி, இரண்டாவது முறையாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மனுதாரா் கடந்த 62 நாள்களாக சிறையில் இருந்து வருகிறாா். மனுதாரரை போலீஸாா் ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்துவிட்டனா். எனவே, மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், மனுதாரரிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காா்த்திக்குக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, காலை மாலை என இரு வேளைகளும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






