லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

போக்சோ வீரமணியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வீரமணியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி....

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணி கடந்த ஆக. 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஏராளமான சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டாா்.

இதுவரை ஜெம் வீரமணிக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து ஜெம் வீரமணி காணொளி மூலம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஆவது வழக்கில் கைதான ஜெம் வீரமணியை அக்.29 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The judicial custody of Gem R Veeramani, who was arrested and imprisoned in a POCSO case, has been further extended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.