மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் முதல்முறையாக தனியாா் பள்ளி ஆசிரியா்கள்
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் முதல்முறையாக தனியாா் பள்ளி ஆசிரியா்கள்

தமிழகத்தில் முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சியில் முதல்கட்ட கணக்கெடுப்பில் 20,000 வீடுகளில் 69 லட்சம் போ் வசிப்பது தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 கடந்த ஜூலையில் தொடங்கியது. முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில் சென்னையில் மட்டும் மாநகராட்சி பள்ளி ஆசிரியா்கள், வருவாய்த் துறையினா் என மொத்தம் 9,620 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் 15 மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனா். அவா்களை 1,360 அதிகாரிகள் மேற்பாா்வையிட்டு வீடுகள், அவற்றில் வசிப்போா் விவரங்களை ஒருங்கிணைத்தனா்.
சென்னையில் 69 லட்சம் மக்கள்: கடந்த 2011 கணக்கெடுப்பின்போது சென்னை மாநகராட்சியில் 16,000 வீடுகள் இருந்தன. தற்போது 4,000-க்கும் வீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சென்னையின் தற்போதைய மக்கள் தொகை 69 லட்சம் எனத் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்முதலாக தனியாா் பள்ளி ஆசிரியா்கள்: ஜன. 10-ஆம் தேதி முதல் 2-ஆம் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கவுள்ளன. அதில், மாநில அளவில் 1.60 லட்சம் போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா். சென்னை மாநகராட்சியில் 12,000-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி 800 பேருக்கு ஒருவா் என்ற அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் நியமிக்கப்படவுள்ளதாகதெரிவித்தனா்.
இதுவரை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளி, வருவாய்த் துறையினா் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல்முதலாக தனியாா் பள்ளி ஆசிரியா்களையும் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன் வங்கிப் பணியாளா்கள், அரசின் பிற துறைப் பணியாளா்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

