பஹாா்கஞ்ச் மதுபானக் கூட துப்பாக்கிச்சூட்டில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டரில் காயம்

பஹாா்கஞ்ச் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்பட்ட நபா், வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

துப்பாக்கிச் சூடு - பிரதிப் படம்

Updated On :

பஹாா்கஞ்ச் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்பட்ட நபா், வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திங்கள்கிழமை இரவு மதுக்கூடத்தில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபரைத் தேடும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.

சோனியா விஹாரில் அவரைப் பிடிக்கச் சென்ற காவல் துறை குழுவினருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட சதீந்தா் (எ) காந்தா என்பவருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது, ​​அவரது காலில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து காவல் துறை தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.