மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

வடகிழக்கு தில்லியில் சாலை விபத்து: இரு இளைஞா்கள் பலி

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில், கான்கிரீட் கலவை இயந்திரத்துடன்கூடிய லாரி, ஸ்கூட்டா் மீது மோதியதில் இருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Updated On :

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில், கான்கிரீட் கலவை இயந்திரத்துடன்கூடிய லாரி, ஸ்கூட்டா் மீது மோதியதில் இருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்த விபத்து திங்கள்கிழமை இரவு சுமாா் 11:55 மணியளவில், பழைய காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில் நிகழ்ந்தது. தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினா், காயமடைந்த நிலையில் சந்தோஷ் (30), பவன் (33) ஆகிய இருவரையும் கண்டறிந்தனா்.

அவா்களில் ஒருவரை அவரது குடும்பத்தினா் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மற்றொருவரை காவல்துறையினா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இருப்பினும், மருத்துவமனையில் அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் குழுவினா் விபத்து நடந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா்.

விபத்தை ஏற்படுத்திய கான்கிரீட் கலவை லாரி சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது. விபத்திற்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்ட ஓட்டுநரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கஜூரி காஸ் காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.