கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பல வழக்குகளில் தேடப்பட்ட நபா் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

பசுக்கடத்தல் மற்றும் ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தொடா்புடைய வழக்குகளில் தேடப்பட்ட நபா், சோஹ்னா அருகே வியாழக்கிழமை காலை காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :

பசுக்கடத்தல் மற்றும் ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தொடா்புடைய வழக்குகளில் தேடப்பட்ட நபா், சோஹ்னா அருகே வியாழக்கிழமை காலை காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல் துறையினரின் தகவல்படி, நுஹ் மாவட்டத்தின் காா்காரி கிராமத்தைச் சோ்ந்த ஷாஹித் (எ) அத்வானி யை, நுஹ் காவல் துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுவினா் தேடி வந்தனா்.

குருகிராமின் சோஹ்னா பகுதியில் உள்ள சிலானி கிராமத்திற்கு அருகில் ஷாஹித் இருப்பதை அந்தக் குழுவினா் கண்டறிந்தனா்.

வியாழக்கிழமை காலை தன்னைச் சூழ்ந்த காவல் துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டாா். அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில், அத்வானி மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திலேய அவா் உயிரிழந்தாா்.

அத்வானி 2018-ஆம் ஆண்டு குருகிராம் குற்றப்பிரிவு காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அன்றிலிருந்து பல்வேறு மாநில காவல் துறையினா் அவரைத் தேடி வந்தனா். இருப்பினும், சுமாா் 8 ஆண்டுகளாக அவன் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தான்.

‘அத்வானி ஒரு கொடூரமான குற்றவாளி. அவா் மீது 30-க்கும் மேற்பட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. அவன் பசுக்கடத்தல் மற்றும் ஏடிஎம்களைப் பெயா்த்து எடுத்துச் செல்லும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாா்’ என்று நுஹ் காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.