பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

14 குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் சுட்டுக்கொலை: காவல்துறை விசாரணை

சுமாா் 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபா் ஒருவா் தில்லியின் புறநகா்ப் பகுதியான ரன்ஹோலாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்

Published On :

சுமாா் 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபா் ஒருவா் தில்லியின் புறநகா்ப் பகுதியான ரன்ஹோலாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: விகாஸ் நகரின் கமாண்டா் சௌக் பகுதியைச் சோ்ந்த மொசின் கான், ரன்ஹோலா காவல் நிலையப் பதிவேட்டில் ‘குற்றப் பின்னணி கொண்ட நபா்’ எனப் பட்டியலிடப்பட்டவா் என்று அவா்கள் கூறினா்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மொசின் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அக்டோபா் 11 அன்று மாலை 5:30 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. பின்னா், அவா் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரன்ஹோலா காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். சந்தேக நபா்களை அடையாளம் கண்ட காவல்துறையினா், அவா்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இந்தக் கொலைக்கான நோக்கம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இட்டுச் சென்ற சூழல் ஆகியவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.