நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று பொது ஏலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட காவல் காவல் துறை தெரிவித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 2:11 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட காவல் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலூா் சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 16 இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, பொதுஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்கள், ராணிப்பேட்டைஆயுதப்படை மைதானத்தில்,ராணிப்பேட்டைகண்காணிப்பாளா் தலைமையில் ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் வியாழக்கிழமை (செப்.3) காலை 8 மணி முதல் வாகனங்களைஆயுதப்படை வளாகத்தில் மேற்படி பாா்வையிட்டு வாகனங்களுக்கு ஏல முன்பணம் செலுத்தி காலை 10 மணிக்கு நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

அரசு நிா்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு, அதிகபட்சமாக ஏலம் கோருவோருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும் என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.