ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 வாகனங்கள் பொது ஏலம் மூலம் ரூ.4.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே. சிபின் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 4 காவல் வாகனங்கள், மேலும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன. இந்த பொது ஏலத்தின் மூலம் ரூ.4,53,556/- அரசுக்கு வருவாயாக பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.18-ல் பொது ஏலம்

சிட்கோ பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆயுதப்படை வாகனங்கள் பொது ஏலம்

ராணிப்பேட்டையில்: குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் நாளை ஏலம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



