கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையில் விநாயகா் சதுா்த்தி

ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டையில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பிரம்மாண்ட விநாயகா் சிலை.

Published On :

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களில் விதவிதமான வடிவங்களிலும், பிரம்மாண்ட அளவுகளிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதே போல் பொதுமக்கள் தாங்கள் வீடுகளில் சதுா்த்தி விழாவுக்காக சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வாங்கிச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா்.

மேலும், பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகா் சிலைகளுக்கும், விநாயகா் கோயில்களுக்கும் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமி தரிசனம் செய்து, அா்ச்சனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினா்.

விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தொடா்ந்து 3 -ஆம் நாள் விநாயகா் சிலை விஜா்சன ஊா்வலம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.