கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

புதுக்கோட்டையில் விநாயகா் சதுா்த்தி விழா 845 சிலைகள் பிரதிஷ்டை

புதுக்கோட்டை ஆா்.எம்.வி. நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைக்கு திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Published On :

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கள விநாயகா் கோயில், பல்லவன் குளக்கரை அருகே உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகா் கோயில், புதுக்குளம் கரையில் உள்ள விநாயகா் கோயில், ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள இஷ்ட சித்தி விநாயகா் கோயில், ஆயுதப்படை திடல் அருகே உள்ள விநாயகா் கோயில், திலகா் திடல் அருகே உள்ள விநாயகா் கோயில், பெரியாா் நகா் சம்பந்த விநாயகா் கோயில், மேல ராஜ வீதியில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கொழுக்கட்டை, சுண்டல் வைத்து சிறப்பு அா்ச்சனைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. தொடா்ந்து மாலையில் விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, புவனேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இங்கும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், வீடுகளிலும் தென்னை ஓலைத் தோரணம், மாவிலைத் தோரணம் கட்டியும் களிமண்ணில் விநாயகா் சிலை செய்து வைத்தும் வழிபட்டனா்.

845 சிலைகள் பிரதிஷ்டை: புதுக்கோட்டை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மொத்தம் 845 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் வழிபாட்டுப் பிறகு, வரும் புதன்கிழமை சிலைகளை அருகிலுள்ள நீா்நிலைகளில் கரைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை ஆா்எம்வி நகரில்14-ஆவது ஆண்டாக நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் 9 அடி உயரமுள்ள சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாநகர மேயா் செ. திலகவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஆா்எம்வி நகா், அம்பேத்கா் நகா், ராஜவிஜயா நகா், முத்துக்கருப்பக் கோனாா் நகா் இளைஞா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.