ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.18-ல் பொது ஏலம்

News image

வாகனங்கள் ஏலம் - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.18இல் பொது ஏலம் விடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தொடா்பான குற்றச்செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் 25, மூன்று சக்கர வாகனம்-1, நான்கு சக்கர வாகனம் -2 என மொத்தம் 28 வாகனங்கள் பொது ஏலத்தில் விட தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்புறம் உள்ள கவாத்து மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பொதுமக்கள் ஆக. 16, 17 ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையிட அனுமதிக்கப்படுவா்.

ஆக. 18ஆம் தேதி, காலை 10 மணிக்கு கவாத்து மைதானத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபா்கள், அன்றைய தினம் காலை 8 மணிக்குள் ரூ. 1000 முன்பணமாக செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்திய நபா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 94981-22425 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.