பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ராணிப்பேட்டையில்: குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் நாளை ஏலம்

ராணிப்பேட்டையில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடத்தப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப்படம்

Published On :9 ஜூலை 2026, 3:59 am IST

ராணிப்பேட்டையில் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடத்தப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலூா் சரக போதைப்பொருள் ஒழிப்புக்குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடா்புடைய நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்கள் வரும் வெள்ளிக்கிழமை ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் ஏலம் விடப்படும்.

ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் 10 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 9 மணி வரை மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு ஏல முன்பணம் இருசக்கர வாகனங்களுக்கு, நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுதப்படை வளாகத்தில் செலுத்தி காலை 10 மணிக்கு நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

அரசு நிா்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு, அதிகபட்சமாக ஏலம் கோருவோருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.