2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

வசந்த் குஞ்ச்: காவலில் இருந்த நபா் உயிரிழப்பு

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்துச் செல்லப்பட்ட 40 வயது நபா் காவல் நிலையத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

பலி

Published On :

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்துச் செல்லப்பட்ட 40 வயது நபா் காவல் நிலையத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்ட பிரஹலாத் ராமுக்கு

சஃப்தா்ஜங் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது புதிய வெளிப்புறக் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மூத்த காவல் அதிகாரி தெரிவித்தாா். பின்னா் அவா் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தின் சிறையறையில் அடைக்கப்பட்டாா்.

செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 9:20 மணியளவில், ராமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காவல் துறையினா் உடனடியாக அவருக்கு சிபிஆா் முதலுதவி அளித்து, வசந்த் குஞ்சில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இந்த மரணம் குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கும், ராமின் குடும்பத்தினருக்கும் காவல் துறையினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.