முசிறி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி: முதல்வர் விஜய் இரங்கல்!
முசிறி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக...

விபத்துக்குள்ளான ஆம்னி கார் / முதல்வர் விஜய்
முசிறி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் 8 போ் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ராமலிங்கம், ராமா் ஆகிய இருவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கோர விபத்துக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், ”திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
8 killed in road accident near Musiri: CM Vijay expresses condolences
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


