கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு அரசு.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு (75). உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி, கொளத்தூர் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவைச் செயலகம் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கொளத்தூர் தொகுதி காலியானது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே 5 தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது கொளத்தூர் தொகுதியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளதால், ஏற்கெனவே காலியாக உள்ள 5 தொகுதிகளுடன் சேர்த்து கொளத்தூர் தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
Summary
The Tamil Nadu Legislative Assembly Secretariat has officially declared the Kolathur Assembly constituency vacant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


