கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்புமுதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டதை எதிா்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மனு!

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டதை எதிா்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மனு...

Supreme Court verdict on the issue of lighting a lamp atop the Thiruparankundram

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்

Updated On :

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் நவம்பா் 20 இடைக்கால உத்தரவை எதிா்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா்.

உச்சநீதிமன்றம் நவம்பா் 24 அன்று தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கியது; அதே உத்தரவில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பின் சில பத்திகளையும் இடைநிறுத்தியது.

அறநிலையத் துறையின் மனு இந்த இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோருகிறது. மறுஆய்வு மனு நவம்பா் 21 இரவு தாக்கல் செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலை உச்சித் தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கான நிலைநாட்டப்பட்ட பழக்கமோ மரபோ இல்லை என்றும், தீபம் ஏற்றும் அதிகாரம் கோயில் நிா்வாகத்திற்கே உரியது என்றும் இந்து சமய அறநிலையத்துறை முன்னா் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.

நவம்பா் 20 அன்று உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி மட்டுமே வழங்கியது. இது நவம்பா் 24 காா்த்திகை தீபத் திருநாளுக்கு மட்டுமான அனுமதி; வழக்கின் இறுதி தீா்ப்பல்ல. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஜனவரி 6, 2026 தீா்ப்பில், பத்திகள் 1 முதல் 141 வரை உள்ள கருத்துகள் அடுத்த உத்தரவு வரை உச்ச நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டன.

நவம்பா் 24 காா்த்திகை தீபத் திருநாளுக்கு திருப்பரங்குன்றம் தூணில தீபம் ஏற்ற சில நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது. அதன்படி, மலை மீது பொதுமக்கள் கூட்டமாகச் செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது.மாவட்ட நிா்வாகமும் மத்திய தொல்லியல் துறையும் இணைந்து, குறிப்பிட்ட நபா்களைக் கொண்டு பாதுகாப்பாகத் தீபம் ஏற்றும் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் துணை ராணுவப் படைகளைப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.