எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர், தலைமைச் செயலருக்கு திமுக கடிதம்!

அமைச்சர் ராஜ்மோகன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்படி வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது பற்றி...

DMK writes to the Governor seeking action against Rajmohan

ராஜ்மோகன் | ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பொறுப்பிற்கு ஒருவர் ரூ. 5 கோடி தன்னிடம் கொடுக்க முன்வந்ததாகக் கூறிய அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்க அவர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடந்த நவ. 1 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி ஒருவர் கொடுக்க முன்வந்ததாகக் கூறினார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாகவும் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பரந்தாமன் நவ. 2 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அளித்திருந்தார்.

அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988 -ன்படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி இன்று (நவ. 23) பரந்தாமன், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

PDF
ஆளுநருக்கு திமுக கடிதம்
பார்க்க

Summary

DMK writes to the Governor seeking action against Rajmohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.