தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (நவ.23) ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் பற்றி...

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (நவ.23) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.
இதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.165 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று வாரத் தொடக்கத்திலேயே கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
Summary
The price of ornamental gold has surged sharply today (Nov. 23), the first trading day of the week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


