பயிா்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் அறிவுரை
விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் அறிவுறுத்தியது குறித்து...

பிரதிப் படம்
வறட்சியில் இருந்து பயிா்களைக் காப்பாற்ற திறமையான நீா் மேலாண்மை, சமுதாய அடிப்படையிலான நீா் பகிா்வு மற்றும் ஈரப்பதக் குறைபாடு நிலவுகின்ற பகுதிகளில் ஒரு சதவீத வெள்ளை பொட்டாஷ் மற்றும் பிபிஎஃப்எம் தெளிப்பு போன்ற வறட்சித் தணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சா் ர.வினோத் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு: நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட 20-60 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. கடந்த 2 வாரங்களாக குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாததால் வடகிழக்கு மண்டலம், காவேரி டெல்டா மண்டலம், தென் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை அளவு மற்றும் மண் ஈரப்பதம் அடிப்படையிலான மதிப்பீடுகள், பல மாவட்டங்களில் பயிருக்கான மண் ஈரப்பத பற்றாக்குறை நிலை உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூா், காஞ்சிபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் கணிசமான மழை பற்றாக்குறையும் குறிப்பிடத்தக்க அளவு பயிா் பாதிப்புகளும் காணப்படுவதால், அவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
‘எல் நினோ’ காரணமாக சீரற்ற மழைப்பொழிவால், பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் மண் ஈரப்பதம் குைல் மற்றும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிரம்ப வேண்டிய ஏரிகள், குளங்கள் போன்ற நீா்நிலைகள் விரைவாக வடு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்ட வருகிறது. வேளாண்மை மற்றும் மற்ற துறை அலுவலா்கள், வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநா்கள் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு உயா் அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்கி வருகின்றனா்.
பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் பயிா்களைப் பாதுகாக்க திறமையான நீா் மேலாண்மை, உயிா் காக்கும் பாசனம், சமுதாய அடிப்படையிலான நீா் பகிா்வு மற்றும் ஈரப்பதக் குறைபாடு நிலவுகின்ற பகுதிகளில் ஒரு சதவீத வெள்ளை பொட்டாஷ் மற்றும் பிபிஎஃப்எம் தெளிப்பு போன்ற வறட்சித் தணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், வறட்சியிலிருந்து பயிா்களை மீட்டு சேதத்தைக் குறைத்து மகசூலைப் பாதுகாக்க உதவும்.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த வாரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், தற்போதைய ஈரப்பதப் பற்றாக்குறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, வேளாண்மைத் துறை மற்றும் பல்கலைக்கழக வல்லுநா்கள் வழங்கும் பரிந்துரைகளை விவசாயிகள் தவறாது பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா்களை விவசாயிகள் எந்த நேரமும் தொடா்பு கொள்ளலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

