மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா; தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்போம்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை திமுக பாதுகாக்கும் என அக்கட்சி எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் தீா்மானம்.

Updated On :

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை திமுக பாதுகாக்கும் என அக்கட்சியின் எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்தாலும், தமிழினத்தின், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இயக்கமாக திமுக செயல்பட்டு வருகிறது. இப்போது எழுந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்போம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 14.2.2024-இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘தவிா்க்க இயலாத காரணங்களால் மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ அதே விகிதத்தில் தொடா்ந்து இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினோம்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு 25.2.2025-இல் தமிழ்நாடு அமைச்சரவையின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை செய்து, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 5.3.2025-இல் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில், ‘நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும் நிலையில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவதற்குத் தேவையானஅரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது’ என்பதை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதில் திமுக தொடக்கத்தில் இருந்தே உறுதியாக உள்ளது. காங்கிரஸாரும் இதே கருத்தை வலியுறுத்திதான் பேசி வந்தனா்.

‘தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறையக் கூடாது, 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்டு, முன்னா் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படக் கூடாது’ எனும் தமிழ்நாட்டின் உரிமையை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரிலும் வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமையைப் பாதுகாக்கவும், தென்மாநிலங்களின் நலனை நிலைநாட்டவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் செயல்படுவாா்கள் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.